ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க .........


பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம்

அதை பற்றி இந்த பதிப்பில் தங்களுக்கு கூறயிருகிறேன்.........................


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க;;1


துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம் 

அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு 

புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது 

எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே! 

----------கவி காளமேகப் புலவர் பாடியது------------

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;2

கலையாத கல்வி;கபடட்ற நட்பு 

குறையாத வயது;குன்றாத வளமை 

போகாத இளமை;பரவசமான பக்தி 

பிணியற்ற உடல்;சலியாத மனம் 

அன்பான துணை;தவறாத சந்தானம் 

தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை 

தடையற்ற கொடை;தொலையாத நிதி 

கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு 

எனப்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாயே!

{திருநள்ளாறு கோவிலில் வரைவு வலையகத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது}
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;3

நோயற்ற வாழ்வு :கல்வி :தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்) 

தனம் :அழகு :புகழ் :பெருமை :இளமை :அறிவு 

சந்தானம் (குழந்தைச் செல்வம்) ;வலிமை :துணிவு 

வெற்றி :ஆயுள் :ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்) :நுகர்ச்சி

----------------அபிராமிப் பட்டர்----------------------

இங்கு வந்த அனைவரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு 
என வாழ்த்தும் நான் சாமி ............................................

1 கருத்து: