சனி, 31 டிசம்பர், 2011

மலேசிய விமான நிலையத்தில் தமிழ்................

இன்று ஆங்கில புத்தாண்டில் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு . இன்று முதல் மலேசியா வானூர்தி நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு . சென்னை , மதுரை வானூர்தி நிலையத்திலும் தமிழில் முதலில் அறிவிப்பு , பின்பு ஆங்கிலம் பின்பு தான் ஹிந்தி . ஆனால் வானூர்தியில் தமிழில் அறிவிப்பு இல்லை என்பது வேதனைக்குரியது. 

சிங்கப்பூர் விமானம் சேவை , மலேசியா விமான சேவை மற்றும் ஏர் ஆசியா விமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இருக்கிறது . தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய இந்திய விமானங்களில் ஏர் இந்திய , ஜெட் ஏர் வேஸ் போன்ற எதிலும் தமிழ் அறிவிப்பு இல்லை . இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழ் பேசும் மக்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும் . மக்கள் நமக்கு என்ன வந்தது என்று சும்மா கிடந்தால் நம் மொழி உரிமையை நாமே இழக்கிறோம். அனைவரும் குரல் கொடுப்போம் , தமிழ் நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் தமிழ் மொழியில் அறிவிப்பு வேண்டும் என அரசு மற்றும் தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்போம். இந்த அழுத்தம் முக நூலின் மூலமாக நாம் தொடங்குவோம்;;;;;
திங்கள், 26 டிசம்பர், 2011

தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்;;;;;;;;;;;;;;;;;;;;;;


தமிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்,,,,,,,,,,,,,
 
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்,,,,,,,,,,,,,,
 
இன்றும் கிராமங்களில் செளமிட்டாய், ஐஸ், கொய்யாபழம், வளையல், உப்பு போன்றவைகளை விற்கும் வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் இளைப்பா திண்ணையில் இடமளிப்பதோடு, தண்ணீரும் தந்து உபசரிப்பார்கள். ஆனால் நகரங்களில் வீடு கட்டும்போது, தன்னுடைய இடத்தையும் தாண்டி, பக்கத்தில் ஒரு அடி, இரண்டு அடி என்று தள்ளி சுவர் எழுப்பும் நிலையில் இருக்கும்போது, திண்ணைக்கு எங்கே போவது,,,,,,,,,,,,,
 
விருந்தோம்பல் பண்பினை கம்பர், இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் வாயிலாகக் கூறுவார்,,,,,,,,,,,,,,,,
 
"அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழாதாள்"   (கம்பராமாயனம்.காட்சிப்படலம்: 15)
 
என்ற பாடல் விருந்தினர்வரின் தானில்லாது இராமன் என்ன செய்வானோ என்று எண்ணிச் சீதை வருந்திய நிலையைப் புலப்படுத்துகிறது.................
 
எங்கள் வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். பாட்டியிடம் ஏன் என்று கேட்டபோதுதான், திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே இந்த உணவு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் இன்று நாங்கள் இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சென்றாலோ, இல்லை வீட்டுப் பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் சென்றாலோ, சென்றவர் பாடு திண்டாட்டம்தான்.
 
நமது முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவியிடையே எழும் ஊடலைத் தீர்க்கும் மருந்தாகவே விருந்தினர் அமைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. விருந்தினர் வந்தால், இருவரும் ஊடலை மறந்து கவனிப்பராம். ஆதலால் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என்று கணவன் ஏங்குவதாக நற்றினை கூறுகிறது................
 

விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை,,,,,,,,,,,,,,,,,,,
 
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
 
என்பார்.
 
தொன்றுதொட்டு விளங்கும் விருந்தோம்பலை நாம் வளர்ப்போம்! நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தருவோமாக!!!!!!

வியாழன், 22 டிசம்பர், 2011

மலேசிய விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை;;;;;;;;;;;


மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் கோங் சோ ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மலேசியாவில் வசித்து வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசு விரும்புகிறது. மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதம் பேர் தமிழர்கள்.............
இந்த ஆண்டு சென்னையில் இருந்து 2,26,353 பயணிகள் மலேசியாவுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வழியாக வந்துள்ளனர். கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு 2,07,697 பேர் சென்றுள்ளனர்......................
சென்னைக்கு செல்லும் 90 சதவீதம் பயணிகளுக்கு ஆங்கிலத்தை விட தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. மலேசியாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பயணிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழில் தகவல்கள், அறிவிப்புகளை வெளியிட கோரிக்கை விடுத்தனர்..............
இந்த கோரிக்கையை ஏற்று கோலாலம்பூர் விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக சென்னைக்கு செல்லும் விமானங்கள் குறித்து அறிவிப்புகளை தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.........................
மலேசியாவில் தமிழில் பேச்சு திறன் கொண்டவர்கள் அதிகளவில் உள்ளதால் தமிழில் அறிவிப்புகள் வெளியிடத் தேவையான ஆட்கள் கிடைப்பதில் எந்த சிரமும் ஏற்படாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றார்...................................ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தமிழரோடு தமிழில் பேசுவோம் ..அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?


சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் “மரியா ஸ்மித் ஜோனெஸ்” என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான “ஏயக்” என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே “ஏயக்” மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். “ஏயக்” மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
“ஏயக்” மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு “ஏயக்” மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. “ஏயக்” மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு “ஏயக்” மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.

ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. “பொதுவான தமிழ்” இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் “வட்டார மொழி இலக்கியங்கள்” என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் “அழிந்து போன மொழிகளின் பட்டியலில்” தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு “ஏயக்” மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் 
தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
“தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…”நான் சாமி
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்,.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க .........


பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம்

அதை பற்றி இந்த பதிப்பில் தங்களுக்கு கூறயிருகிறேன்.........................


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க;;1


துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம் 

அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு 

புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது 

எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே! 

----------கவி காளமேகப் புலவர் பாடியது------------

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;2

கலையாத கல்வி;கபடட்ற நட்பு 

குறையாத வயது;குன்றாத வளமை 

போகாத இளமை;பரவசமான பக்தி 

பிணியற்ற உடல்;சலியாத மனம் 

அன்பான துணை;தவறாத சந்தானம் 

தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை 

தடையற்ற கொடை;தொலையாத நிதி 

கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு 

எனப்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாயே!

{திருநள்ளாறு கோவிலில் வரைவு வலையகத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது}
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ;;3

நோயற்ற வாழ்வு :கல்வி :தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்) 

தனம் :அழகு :புகழ் :பெருமை :இளமை :அறிவு 

சந்தானம் (குழந்தைச் செல்வம்) ;வலிமை :துணிவு 

வெற்றி :ஆயுள் :ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்) :நுகர்ச்சி

----------------அபிராமிப் பட்டர்----------------------

இங்கு வந்த அனைவரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு 
என வாழ்த்தும் நான் சாமி ............................................

தமிழ் தாய் வாழ்த்து................

தமிழ் தாய் வாழ்த்து;;;;;;;;;;;;;;;;;;;;
நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் 
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில் 
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் 
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே! 
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற, 
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே! 
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


                                                         தமிழ் தாய் வாழ்த்து...................

சனி, 10 டிசம்பர், 2011

தொல்காப்பியம் முற்றோதல் - இசைக் குறுவட்டுகள் இலவமாகப் பதிவிறக்கம் செய்ய......

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் குறுவட்டு - 1

குறுவட்டு - 2

குறுவட்டு - 3

குறுவட்டு - 4

குறுவட்டு - 5

குறிப்பு: பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் ;;;;;;;;;;samy..............................

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது;;;;;;;;;;;;

உயிரெழுத்துக்கள் - 12 மற்றும் ஆயுத எழுத்து - 1
a aa i ii u uu e ee ai o oo au q
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ


மெய் எழுத்துக்கள் - 18 மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள்- 216
ka kaa ki kii ku kuu ke kee kai ko koo kau k
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்nga ngaa ngi ngii ngu nguu nge ngee ngai ngo ngoo ngau ng
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ங்

sa saa si sii su suu se see sai so soo sau s
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்

nja njaa nji njii nju njuu nje njee njai njo njoo njau nj
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்

ta taa ti tii tu tuu te tee tai to too tau t
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்

Na Naa Ni Nii Nu Nuu Ne Nee Nai No Noo Nau N
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்

tha thaa thi thii thu thuu the thee thai tho thoo thau th
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்

wa waa wi wii wu wuu we wee wai wo woo wau w
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்

pa paa pi pii pu puu pe pee pai po poo pau p
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்

ma maa mi mii mu muu me mee mai mo moo mau m
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்

ya yaa yi yii yu yuu ye yee yai yo yoo yau y
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்

ra raa ri rii ru ruu re ree rai ro roo rau r
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்

la laa li lii lu luu le lee lai lo loo lau l
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்

va vaa vi vii vu vuu ve vee vai vo voo vau v
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்

La Laa Li Lii Lu Luu Le Lee Lai Lo Loo Lau L
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்

za zaa zi zii zu zuu ze zee zai zo zoo zau z
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்

Ra Raa Ri Rii Ru Ruu Re Ree Rai Ro Roo Rau R
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்

na naa ni nii nu nuu ne nee nai no noo nau n
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்மேலும் சில பிற மொழி எழுத்துக்கள்;;;;;;;;;;;;;;;;;


S Sa Si Sii Su Suu Se See Sai So Soo Sau S
ஸ் ஸ ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ ஸ்

ja jaa ji jii ju juu je jee jai jo joo jau j
ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஜ்
sha shaa shi shii shu shuu she shee shai sho shoo shau sh
ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஷ்
இது என்னால் முடிந்தவை பிழை இருந்தால் மன்னிக்கவும் ;;;;;


'''புரிதல் என்பது ஒரு மொழி புரிந்து கொண்டால் அங்கு பிழைக்கு இடம் இல்லை தவறுக்கும் வழி இல்லை '''' சாமி;;;;;;;;;;;;;;;;;;;;;; எனது தவறுகளை இங்கு எழுதவும் .........................................தமிழின் பெருமை;;;;;;;;;;;;;;;;;;;;


கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் போலிருக்கின்றது;;;;;;;;;;;;
மேலும் சில தமிழின் பெருமைகள் இங்கே;;;;;;;;;;;;;;
ஏறுமுக இலக்கங்கள்;;;;;;;;;;;;;;
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????
இறங்குமுக இலக்கங்கள்;;;;;;;;;;;;;;;
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள் நீட்டலளவு;;;;;;;;;;;;
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்;;;;;;;;;;;;;
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்;;;;;;
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு;;;;;;;;;;;;;;
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு;;;;;;;;;;;;;;
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி................................................சாமி