தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம். அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள். இன்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. இருப்பினும் நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும் நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது திணித்துவிட்டனர்....................................
செவ்வாய், 6 டிசம்பர், 2011
தமிழ் ஓர் இயற்கை மொழி,,,,,,,,,,,
தமிழும் தாவரமும்..............
இயற்கையாகிய பயிரினமும் விலங்கியல் உயிரினமும் தாம் மொழிப்பொருளையும் சொற்பெருக்கத்தையும் வழங்கியிருக்கிறது என்ற உண்மை பலருக்கு வியப்பூட்டலாம். நாம் படிப்பதற்கு பயன்படுத்தும் இதழ், ஏடு, சுவடி, மலர் போன்றவைகளும் எழுதப்பயன்படுத்தும் பொருள்களும் தாவரம் தமிழுக்கு அளித்தவை.
தாவர இலைகளுக்கு அடுத்துத்தோன்றுவதைக் கொழுந்து என்று கூறுவர். மனைவிக்கு அடுத்துப் பிறந்தவளைக் கொழுந்தி என்றும் கணவனுக்கு அடுத்து பிறந்தவனைக் கொழுந்தன் என்றும் தமிழுலகு குறிப்பிடுகிறது.
திருமண நிகழ்வில் மருவுக்கழைத்தல், மருவுசாப்பாடு என்பனவைகளுக்கு இடமுண்டு. மரு என்பதற்கு இயற்கை மணம் என்பதோடு இரண்டு உள்ளங்கள் கலத்தல் என்பதையும் உணர்த்துகிறது. இந்த இன்பக்கலப்பினடியிலே பிறந்த சொற்கள் தாம் மருமகன், மருமகள், மருகி ஆகியவை.
இறைவனுக்குப் பூக்கொண்டு மலர் தூவி வழிப்பட்ட வழிபாட்டு முறைக்கே பூ செய்தல், பூசுதல் என்று குறிப்பிடுவர். பூ செய்தலே மருவி பூசையயிற்று. பூசை என்ற தமிழ்ச்சொல்லே வட மொழியில் பூஜை என்றுத் திரிந்தது.
ஆலமரமே ஆதிகால மக்கள் கூடிய மன்றமாயிற்று. ஊர்ப் பொதுக்கூட்டங்களும் நிகழ்ந்தன. பின்பு அதுவே வழிபடும் இடமுமாயிற்று. அடர்ந்து படர்ந்து கிளைத்துத் தழைத்து விழுதுகள் பல தாங்கி நெடுநாள் நிலைப்பெற்றுயர்ந்த ஆலமரமே பிற்காலத்தில் ஆலயம் ஆயிற்று. ஆண்டு தோறும் ஆனி முழு மாத நிலவன்று ஆலமரத்திற்கு பூசை நடைபெறும். ஆலமரத்திற்கு Banyan என்ற பெயரை ஆங்கிலத்திற்கு அளித்தவர்கள் தமிழர்களே. பாரசீக வளைகுடாவில் பந்தர் அப்பாசு எனும் துறைமுகத்தில் தமிழ் வியாபாரிகள் வணிகத்தின் பொருட்டு அங்கு குழுமியிருந்தனர். அங்குள்ள ஆலமரத்தின் கீழ் சமய ஆசாரப்படி தொழுகை மேற்கொண்டனர். அவர்கள் மொழியில் வணிகர் என்பதற்குப் பனியன் என்பது பெயர். ஆலமரத்தின் கீழ் வணிகர்கள் இருந்து தொழுததால் BANYA TREEஎன்றே நாளடைவில் பெயர் பெறலாயிற்று.
பல ஊர்ப் பெயர்களுக்குத் தாவரங்களின் வழியாகவே பெயர் பெற்றிருப்பது இயற்கையே. உதாரணமாக அரசூர், ஆலங்குளம், இலுப்பையூர், கடம்பவனம், நுங்கம்பாக்கம், நெல்லூர், நெற்குன்றம், மாங்குடி, மூங்கில் வனம், தாமரைக்குளம் போன்றன.
இந்த பாரத கண்டத்தின் பழம் பெயரே நாவலந்தீவு என்பதாகும். அது மட்டுமின்றி நாம் நிலத்தினையும் பூவாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைக்கின்றோம். வெட்சி, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் புறத்திணை ஏழிற்கும் மலர்ப்பெயரையே மகிழ்ந்தளித்துள்ளனர். அகவொழுக்கத்திற்கும் பூ, புறவொழுக்கத்திற்கும் பூ என்றான பின் தமிழர் வாழ்விலே மலர் பெற்றுள்ள நிலையை நன்குணர முடியும். மலரில்லாத வழிபாடா? மாலையில்லாத விழாவா? மலர்கள் இல்லாத சமூக விழாவா? மலரணியா மகளிரா? பிறப்பு இறப்பு எல்லாமே பூவோடுதான் நடைபெறும்.
பெண்கள் முகம் தாமரை, கண் குவளை, வாய் செவ்வாம்பல், பல் முல்லை, மூக்கு எட்பூ, கரம் செங்காந்தள் எனப் பூவாலே வருணிப்பர் புலவர். முற்காலத்தே மகளிர் மிகுந்த மணத்தையும், அழகிய நிறத்தையும், மென்மைக் குணத்தையும் பெரிதும் விரும்பியதால் தம் மக்கட்குப் பெரும்பாலும் பூவாலே பெயரிட்டனர். அல்லி, கமலம், செந்தாமரை, தாமரைக்கண்ணி, துளசி, பூங்கொடி, பூங்கோதை, மலர்க்கொடி, மலர்விழி, முல்லை போன்ற பெயர்களை விரும்பி வைத்த்தனர்.
ஆண்களுக்கும் தாவரப்பெயர்களையே சூட்டியுள்ளனர். அரசப்பன், கடம்பன், சோலையப்பன், மருதன், மருதமுத்து, வேலப்பன் முதலானவை அப்பெயர்களில் சில. இப்பொழுது என்ன பெயர் வைக்கின்றோம் என்றே தெரியாமலே ஒரு மயக்கம் நிலவி வருகிறது. அதில் தமிழ்க் கோலமும் இல்லை, தமிழ்ச் சாயலும் இல்லை. பொருளை வெளிப்படையாக உணர்த்துவதே தமிழர் பண்பாடு. இன்றைய தமிழர் பொருளற்ற வாழ்வில் மூழ்கியிருப்பது முற்றிலும் வருந்தத்தக்க செயலாகும்..............................
நன்றி தமிழ் மனம் samy................................
தமிழ் திருக்குறள் பற்றி ஒரு விளக்கம் ;;;;;;;;;
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்....
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
- எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
- பதினென்கீழ்க்கணக்கு
- ஐம்பெருங்காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.
அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.................
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை....
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்....
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”.....
திருக்குறள் மற்றும் அது சம்பந்தமான புத்தகங்களை இணையத்தின் வாயுலக பெற ஜீவா புத்தகாலயம் வழங்கும்;;; http://www.noolulagam.com யை பார்க்கவும் samy
திங்கள், 5 டிசம்பர், 2011
உன் மொழி தமிழ் மொழி;;;;;
தமிழ் மொழி;;;;
தடுக்கி விழுந்தால் மட்டும் அ..ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ....
சூடு பட்டால் மட்டும் உ..ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ..ஓ...
வக்கணையின் போது மட்டும் ஔ...
விக்கலின் போது மட்டும் .'. ...
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி தமிழ் மொழியென்று!!
பேஸ் புக்கில் படித்தது. இதன் உண்மையான படைப்பாளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy

ஞாயிறு, 4 டிசம்பர், 2011
பத்துப்பாட்டு முற்றோதல் - இசைக் குறுவட்டுகள் இலவமாகப் பதிவிறக்கம் செய்ய......
இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக்
கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.................
கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.................
குறுவட்டு - 1 |
குறுவட்டு - 2 |
குறுவட்டு - 3 |
குறுவட்டு - 4 |
குறுவட்டு - 5 |
குறிப்பு: பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் ;;;;;;;;;;samy
உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..........
விழ விழ எழுவான் விரத்தமிழன்;;;;;;;;;;;;;;;;
விழித்திடு தமிழா !!! வென்றிடுவோம் தமிழா!!;;;;;;;நான் படித்தவை உங்களுக்கு.............................
எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.
இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழர்களை பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்....
இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.
பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.
ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது,
தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.............
ஹிட்லர் மன்னிப்பு கோரல்;;;;;;;;;;;;;;;;;;;;;
ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார். ‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார்.
வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார். முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.
ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.
யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.
இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார்.
தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன். இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது..........விழித்திடு தமிழா !!! வென்றிடுவோம் தமிழா!!..samy,,,,,,,,,,,

![]() |
உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் |
![]() |
| மாவீரன் செண்பகராமன் |
![]() |
| ஹிட்லர்.... |
வெள்ளி, 2 டிசம்பர், 2011
தமிழக அணைகள் (Tamilnadu Dams);;;;;;;;;;
தருமபுரி;;;;;
கிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி நீர்த்தேக்கம்.
திருவண்ணாமலை;;;;;;;;;
சாத்தனூர் அணை.
விழுப்புரம்;;;;;;;;;;;;;
மணிமுத்தாறு, கோமுகி, வீடூர் நீர்த்தேக்கம்.
சேலம்;;;;;;;;;;;;;;;;;;
மேட்டூர் அணை,வசிட்டா நதி அணை.
ஈரோடு;;;;;;;;;;;;;
பவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி, ஓரத்துப் பள்ளம், உப்பாறு.
நீலகிரி;;;;;;;;;;
அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி நீர்த்தேக்கம்.
கோயம்புத்தூர்;;;;;;;;;;;;;
அமராவதி,சின்னாறு,பரம்பிக்குளம், ஆளியாறு,திருமூர்த்தி நீர்த்தேக்கம்.
தஞ்சாவூர்;;;;;;;;;;;;;
கல்லணை,
மதுரை;;;;;;;;;;;;;
வைகை அணை.
தேனி;;;;;;;;;;;;;;;;
மஞ்சளாறு அணை, வைகை அணை
விருதுநகர்;;;;;;;;;;;
பிளவக்கல் அணை
திருநெல்வேலி;;;;;;;;;;;;
பாபநாசம், கடனாநதி, இராமா நதி, கருப்பா நதி, சேர்வலாறு, குண்டாறு, மணிமுத்தாறு அணை
கன்னியாகுமரி;;;;;;;;;;;;
பேச்சிப்பாறை அணை................
அணைகள் பற்றி தகவல் இருந்தால் அனுப்பவும் ...............samy
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)